-சம்மாந்துறை நிருபர்-
அரசின் அறிவித்தலுக்கு அமைய நீண்டகாலமாக மூடப்பட்டு காணப்படும் நெல் களஞ்சியசாலைகள் நாடளாவிய ரீதியில் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை நெற் சந்தை சபையின் சம்மாந்துறை கிளை திறக்கப்பட்டிருந்ததுடன், அதிகாரி ஒருவரும் அங்குள்ள காரியாலயத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.
மேலும், நெல் சந்தை சபையின் சம்மாந்துறை கிளையின் நெற் களஞ்சியசாலை நெல் கொள்வனவை மேற்கொண்டு சேமித்து வைக்கும் வகையில் தயார் நிலையில் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதே வேளைஇ நிந்தவூரில் உள்ள நெற் சந்தை சபையின் கிளை மூடப்பட்டுள்ளதுடன் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதி புற்கள் நிறைந்து காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.