-சம்மாந்துறை நிருபர்-
இலங்கையில் மிகவும் தீவிரமான நோயாகக் காணப்படுகின்ற மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் இன்று புதன்கிழமை காலை 09 மணி முதல் 10 மணிவரை சம்மாந்துறையில் நடைபெற்றது.
சம்மாந்துறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மார்பக் புற்றுநோய் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சஹிலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, ஊர்வலத்தில் பங்கேற்றார்.
சம்மாந்துறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் முன்னால் ஆரம்பமான இந்த ஊர்வலம் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலம் வரை சென்றது. பின்னர் அங்கிருந்து சம்மாந்துறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் முன்னால் நிறைவடைந்தது.
இதில் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், சுகாதார விழிப்புணர்வு கழகங்கள் என்பன கலந்து கொண்டன.