சம்பிக்க ரணவக்க கிழக்கிற்கு விஜயம்

 

ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக்கின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டார்.

இதன் போது, அதிபரின் தலைமையில் பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம், ஆசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சிநேகபூர்வமாக சந்திப்பும் உரையாடலும் இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்