சந்தையொன்றில் தீ விபத்து: 3 கடைகள் முற்றாக சேதம்

முல்லைத்தீவு நகரத்திலுள்ள சந்தையொன்றில் நேற்று செவ்வாய் கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் அப்பகுதியிலுள்ள மூன்று கடைகள் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மின் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு மற்ற கடைகளுக்குத் தீ பரவாமல் இருக்க கடை ஊழியர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து தீயை அணைத்துள்ளபோதும் கடையிலுள்ள பொருட்கள் தீயில் எரிந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்