திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புல்மோட்டை 3ம் வட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நடமாடியதால் 119 எனும் அவசர இலக்கத்திற்கு மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து புல்மோட்டை பொலிஸார் கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்ற வேளையில் அங்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றதில் வழக்குகள் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இருந்ததாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
பதற்றமடைந்த நிலையில் மக்கள் அங்கு ஒன்று கூடியதால் பொலிஸார் பாதுகாப்புடன் குறித்த நீதிபதியை பின் பக்கத்தினால் வெளியேற்றி அனுப்பியதாக புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .
குறித்த சிவில் சமூகத்தை சேர்ந்த வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட பெண் ஒருவரின் வீட்டுக்கு நீதிபதி இரவு நேரத்தில் செல்ல முடியுமா என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும் குறித்த நீதிபதியின் அரச வாகனமும், குறித்த பெண்ணின் வேலையாள் ஒருவரினால் செலுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த வாகனத்தை பொலிஸார் மீட்டு நீதிபதியிடம் பொலிஸார் ஒப்படைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.