காலியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேகரித்த குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்று கிழமை பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி என்பன சந்தேக நபருடன் கைது செய்யப்பட்டன.