-மூதூர் நிருபர்-
திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவரை நேற்று வியாழக்கிழமை இரவு சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவரென சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட வீட்டிலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான இரண்டு சீல் சாராய போத்தல்கள், ஆறு பியர் டின்கள்,ஒரு கசிப்பு போத்தலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் சட்டவிரோதமான மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானங்களுடன் குறைத்தபன் கைது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று வெள்ளிக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்