-யாழ் நிருபர்-
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்கள் மற்றும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்களுடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்