ஜா – எல, உடவெல பிரதேசத்தில் சட்டவிரோத பன்றி இறைச்சி கடையிலிருந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவை மற்றும் ஜா – எல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 35 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத பன்றி இறைச்சி கடையில் சட்டவிரோதமாக பன்றி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்பதோடு ஏனைய இருவரும் பன்றி பண்ணை நடத்தி வந்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 30,900 ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்