2024 ஆம் ஆண்டில் சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் பீடியின் அதிகரிப்பு காரணமாக, அரசாங்கம் அதன் எதிர்பார்க்கப்பட்ட 118 பில்லியன் ரூபாய் வரி வருவாயை இழந்துள்ளதாக, இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்த புகையிலை சந்தையில் சட்டப்பூர்வ சிகரெட்டின் பங்கு 20 சதவீதம் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் 9.7 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சட்டப்பூர்வ புகையிலைத் தொழில், அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வரி பங்களிப்பாளராக இருந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில் மொத்த வரி வருவாயில், 161.1 பில்லியன் ரூபாவினை இலங்கை புகையிலை நிறுவனம் பங்களிப்பு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்