உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 374,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.