சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பி அன்ட் எச் (B & H) சிகரெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
புத்தளம்இ பலாவியா பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரொருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் றோய் சுமனவர்தனவின் தலைமையில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசேட அதிரடிப்படையினரால் நேற்று சனிக்கிழமை மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி பகுதியில் விசேட சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.