-நுவரெலியா நிருபர்-
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நானுஓயா பிரதான நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மரம் விழுந்ததில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளாசோ பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது வீதியோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றினை சட்ட விரோதமாக வெட்டி கொண்டிருந்த வேளையில் திடீரென மரம் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது வீழ்ந்தமையால் குறித்த விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது
எனினும் குறித்த மரத்தினை வெட்டியது யார் என்று தெரியாத நிலையில் சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்தினால் சற்று நேரம் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளது.