பொரளையில் சகோதரனை கத்திரிகோலால் குத்தி கொலை செய்த மூத்த சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 8, பொரளை, சர்பன்டைன் வீதியை சேர்ந்த ஐ. எச் . ஜயந்த (வயது – 55) என்ற நபராவார்.
சந்தேக நபர் மது போதையில் இருக்கும் போது சகோதரருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தகராறின் போது மூத்த சகோதரன் இளைய சகோதரனின் மார்பின் இடது பக்கத்தில் கத்திரிகோலால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.