2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் அடுத்த மாதம் 15 திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளபடும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சகல பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறைமையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய நிகழ்நிலை முறைமை மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது