2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, 244, 228 மாணவர்கள் கா.பொ.த உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இது 75.72 சதவீதம் ஆகும்.
இதேவேளை 13,309 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் “ஏ” சித்தி பெற்றுள்ளதுடன் இது 4.13 சதவீதம் ஆகும்.
2.12 சதவீத மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.
இந்த பரீட்சை முடிவுகளின்படி காலி சங்கமித்த மகளிர் பாடசாலை மாணவியொருவர் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.