சந்தையில் கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
கோழி இறைச்சிக்கான தேவை குறைவடைந்துள்ளதால் அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ கோழியின் விலை 100 முதல் 150 ரூபா வரை குறையலாம் என சங்கம் தெரிவிக்கிறது.
ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை தற்போது 1000 ரூபா தொடக்கம் 1100 ரூபா வரை உள்ளதாகவும், அடுத்த பதினைந்து நாட்களில் இந்த விலை 900 முதல் 850 ரூபா வரை குறையலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், வரும் கிறிஸ்மஸ் காலத்துக்குள் கோழி இறைச்சிக்கான தேவை ஓரளவிற்கு அதிகரிக்கலாம், அதனால் மீண்டும் விலை உயரலாம் என சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முட்டை ஒன்றின் விலை 50 ரூபா தொடக்கம் 55 ரூபாவாக இருந்ததினால், தேவைக்கு ஏற்றவாறு வரத்து இல்லாத காரணத்தினால், தற்போது முட்டை ஒன்றின் விலை 30 – 36 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கிறிஸ்மஸ் காலம் மற்றும் வருட இறுதிக்குள் முட்டைக்கான தேவை மீண்டும் அதிகரிக்கலாம் எனவும், இதனால் முட்டையின் விலை சிறிய அளவில் மீண்டும் அதிகரிக்கலாம் எனவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.