கொள்கை வட்டி விகிதங்களை மாற்றமின்றி தொடர்ந்தும் ஒரே மட்டத்தில் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய துணை நில் வைப்பு வசதி விகிதம் 8.25 சதவீதமாகத் தொடர்ந்தும் பேணப்படவுள்ளது.
துணைநில் கடன் வசதி விகிதம் 9.25 சதவீதமாக மாற்றமின்றி பேணப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூர் சந்தையிலிருந்து கணிசமான டொலர்களை மத்திய வங்கி கொள்வனவு செய்ததன் ஊடாக இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இதில் சீன மக்கள் வங்கியின் பரிமாற்ற வசதியும் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.