கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு : பெண் உட்பட இருவர் படுகாயம்
கொழும்பு கொட்டாஞ்சேனையில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை , மேலும் சந்தேக நபர்கள் அல்லது அவர்களுடைய நோக்கங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.