உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய (1) போட்டியில் இங்கிலாந்து மற்றும் கொங்கோ ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் முதல் 7வது நிமிடத்தில் கொங்கோ அணி முதல் கோலை பதிவு செய்து முன்னிலை வகித்தது.
எனினும் இங்கிலாந்து அணியினால் முதல் பாதியில் எவ்வித கோலையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் கடுமையான சவாலுடன் இரண்டாம் பாதியில் நுழைந்த இங்கிலாந்து 75 மற்றும் 86 வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பதிவு செய்தன.
வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் எவ்வித கோலையும் பெறவில்லை.
இதன்படி 2-1 என்ற கோல் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.