கொகா கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளாரா மாஸ்க்?

உலகின் பெரும் செல்வந்தர் எலோன் மஸ்க் அடுத்து கொகா கோலா நிறுவனத்தை விலைக்கு வாங்கவிருப்பதாய் வேடிக்கையாகக் கூறியுள்ளார். அண்மையில் அவர், ட்விட்டர் சமூக ஊடகத்தை 44 பில்லியன் டொலருக்கு வாங்கவுள்ளதாகத் தகவல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து மஸ்க்கின் புதிய பதிவு வந்துள்ளது.

“அடுத்து நான் கொகா கோலாவை வாங்குகிறேன். அதில் மீண்டும் கொக்கெய்னைச் சேர்ப்பேன்” என்று எலோன் மஸ்க் பதிவிட்டார். கொகா கோலா பானத்தின் ஆரம்பக்கட்ட செய்முறையில் ‘கொக்கெய்ன்’ போதைப்பொருள் தயாரிக்கத் தேவையான கொக்கோ இலைகள் சேர்க்கப்பட்டிருந்தன.

பானத்தில் அப்போது 3.5 மில்லிகிராம் அளவிலான கொக்கெய்ன் இருந்ததாக நம்பப்படுகிறது. கொகா கோலா பானங்களிலிருந்து அது 1903ஆம் ஆண்டில் நீக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.