அநுராதபுரம் சிறைச்சாலையில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகிய கைதி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 வயதுடைய தமிழ் கைதியே இவ்வாறு முதலையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறைச்சாலை பகுதியில் உள்ள மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் குறித்த கைதியும் இன்னும் சில கைதிகளும், பயிர்ச் செய்கைகளில் நேற்று ஈடுபட்டிருந்த போது மூங்கில் புதருக்குள் மறைந்திருந்த முதலை கைதியின் காலைப் பிடித்து மல்வத்து ஓயாவுக்கு இழுத்துச் சென்றதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான குறித்த கைதி ஒரு கை, கால் மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.