-யாழ் நிருபர்-
கிளிநொச்சி உருத்திபுரத்தில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்து அவரிடமிருந்த 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
பொலிஸ் STF மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இணைந்தே திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்ட போது உருத்திபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டதில், அவரிடமிருந்த 04 கேரள கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 07 கிலோ 25 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.02 மில்லியன் ஆகும் என தெரிவிக்கப்படுவதுடன்
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்ட 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர், கேரள கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.