அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் பயணித்த சிலர் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.