கொழும்பு, இரண்டாம் குறுக்குத்தெரு, ரெக்லமேஷன் வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.