கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடஹமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருவருக்கிடையில் வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.