இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 33 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் ரக போதைப்பொருளுடன் இவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக விமானநிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு 10 ஐ வசிப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்