இந்தியாவில் வயதை குறைத்து கூறி நபர் ஒருவரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சர்கேஜ் (வயது – 34) என்பவரே இதன் போது பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சர்கேஜ் என்பவர் திருமணத்திற்காக பெண்பார்த்த போது மணப்பெண்ணின் பயோ டேட்டாவில் பிறந்த திகதி மே 18, 1991 என குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னைவிட ஒன்றரை வயது குறைவான பெண் என்பதால், அவர் திருமணத்துக்கு சம்மதித்துள்ளார்.
திருமணம் முடிந்து ஓராண்டு ஆகியும், அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் மருத்துவ பரிசோதனைக்காக மனைவியை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்ற நிலையில் சோனோகிராபி பரிசோதனை செய்த மருத்துவர், பெண்ணுக்கு 40 முதல் 42 வயது இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதால், அவரால் இயற்கையாக கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறைவு என கூறியுள்ளார்.
அதன்பின் தனது மனைவியிடம் வயது குறித்த கல்வி சான்றிதழை வாங்கி ஆய்வு செய்தபோது அதில் பெண்ணின் பிறந்த ஆண்டை 1985 என்பதற்கு பதில் 1991 என அவரது குடும்பத்தினர் மாற்றம் செய்திருப்பதை சர்கேஜ் கண்டு பிடித்தார்.
இதனையடுத்து குறித்த நபர் மனைவி மற்றும் மனைவி குடும்பத்தார் மீது மோசடி புகார் அளித்ததையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது பொலிஸார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்