லிந்துலை நாகசேன பம்பரகலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பம்பரகலை தோட்ட பகுதியை சேர்ந்த காளிமுத்து மாரியாய் (வயது – 80) என்பவர் குளவிகொட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.
குறித்த பெண் தோட்ட தொழிலில் ஓய்வு பெற்றவர் இருப்பினும் கைகாசுக்கு தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த போதே குளவி கொட்டுக்கு உள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.