-பதுளை நிருபர்-
எட்டம்பிடிய பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பேர் எட்டம்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது
4 ஆண்களும், 8 பெண்களும் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டம்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
குளவி கூட்டின் மீது கழுகு தாக்கியதாகவும், அதன் பின்னர் குளவிகள் கலைந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
