ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.
2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் உள்ளன. ரத்னசேகர பல பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில் ஒரு பயிற்சியாளராகவும் வளவாளராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என நன்கு அறியப்பட்டவர்.