கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் இன்று வெள்ளிக்கிழமை புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எம்.வை.பைசால் மாகாண முதலைமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாகாண பொதுச் சேவைஆணைக்குழுவின் செயலாளராக ஜே.லியாகத் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாகாண விவசாய விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜி.கோபாலரட்ணம் பேரவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜி. திசாநாயக்கா விவசாய அமைச்சின் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாகாண ஆளுனரின் செயலாளராக கடமையாற்றிய எல் பி.மதன்னாயக்கா சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய எம்.சிவலிங்கம் அவரது நிரந்தர பதவியான மட்டு.மாநகர ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய என்.மணிவண்ணன் அவரது நிரந்தர பதவியான மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.