வவுனியா, சமனங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமனங்குளம் பகுதியை சேர்ந்த தவரூபன் லக்சிகா (வயது – 24) என்ற யுவதியே மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி கிணற்று மோட்டாரை இயக்கிய போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த நிலையில் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றின் அருகில் சென்று பார்த்த போது யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.