காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென கல்முனையில் ஆர்ப்பாட்டப்பேரணி

-அம்பாறை நிருபர்-

பலஸ்தீன் மக்களுக்காக ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் கல்முனையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஜும்ஆத் தொழுகையைத்தொடர்ந்து கல்முனை முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் அருகில் உலமாக்கள், கல்முனை அனைத்துப்பள்ளிவாசல்களின் நிருவாகிகள், கல்முனை பொது அமைப்புக்கள், பெருமளவிலான பொது மக்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு இஸ்ரேலின் கொடூரத்தாக்குதலைக் கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன்,மேலும் கண்டனப்பேருரை மற்றும் பலஸ்தீன மக்களுக்காக துஆப்பிரார்த்த்னையும் இதன் போது இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்