அம்பாந்தோட்டை, சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரியவெவ – மஹகல்வெவ வீதியில் மஹகல்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
தணமல்வில பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
கால்வாயினுள் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயினுள் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குமாரகமவிலிருந்து சூரியவெவ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதி பலத்த காயமடைந்துள்ள நிலையில் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் சூரியவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்