காலி கோட்டையில் இருந்து விழுந்து பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வக்வெல்ல, ஹப்புகல, குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் தவலம கமகே ஜனித் சந்துல (வயது – 21) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
உயிர் இழந்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தனது நண்பர்கள் குழுவுடன் காலி கோட்டைக்குச் சென்ற நிலையில் காலி கோட்டையில் உள்ள பழைய கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கோட்டை சுவரில் நடந்து செல்லும் போது அவர் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோட்டை சுவரில் இருந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர், பொலிஸ் அதிகாரிகளால் காலியில் உள்ள கராபிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.