காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடல்ல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை
காலை சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
காலி, தடல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்