இந்த வருடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டில், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ஊடாக கார்களை மீள் ஏற்றுமதி செய்யும் செயற்பாடுகள் 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக இரண்டாவது காலாண்டில் 25,526 அலகுகளும் மூன்றாம் காலாண்டில் 75,583 அலகுகளும் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து இயங்கும் ரோரோ எனப்படும் கப்பல் நிறுவனத்தின் செயற்திறன் அதிகரிப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் விநியோக வலையமைப்பில் ஷங்காய், உல்சான், தைகோங், பியோங்டேக், டாஃபெங் மற்றும் போல்டிமோர் போன்ற பல துறைமுகங்கள் இணைந்து கொண்டமையினால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.