மட்டக்களப்பு – காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார காரியாலயம் நேற்று சனிக்கிழமை திறந்த வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் காத்தான்குடி மீராப்பள்ளி வட்டார வேட்பாளர் ஈ.எம். றுஸ்வின், காத்தான்குடி பதுரியா வட்டார வேட்பாளர் எம்.ஐ.எம். அஜ்வத் பலாஹி, காத்தான்குடி அன்வர் வட்டார வேட்பாளர் எம்.எச்.எம். றிஸ்வி ஆகியோரை ஆதரித்து இந்த தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், காத்தான்குடி பிரதேச கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.