காலியில் பாடசாலை மாணவியொருவர் காதலனுடன் முரண்பட்டு உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.
எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த மாணவி காதலனிடம் “தொவில்” ஆட்டம் பார்க்க செல்ல வேண்டாம் என கூறியுள்ளார் ஆனால் காதலன் காதலியின் வேண்டுகோளை மீறி தொவில் ஆட்டம் பார்க்க சென்றதால் காதலி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்