காணியை துப்பரவு செய்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்

-கிளிநொச்சி நிருபர்-

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வண்ணாங்கேணி பகுதியில் காணி ஒன்றை துப்பரவு செய்து தீ வைத்த போதே இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவம் மற்றும்  பொலிஸார்  சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க