மட்டக்களப்பில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் உள்ள மூன்று தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மூவர், கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் முதல் காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் அவர்களுடைய பெற்றோரால்  முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ரவிச்சந்திரன் மனோஜ், காலிமுத்து புலேந்திரன், பி.துஷாந்தன் ஆகிய 3 மாணவர்களுமே நீராட சென்றபின் வீடுகளுக்குத் திரும்ப வில்லை​யென முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு பகுதியில் இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சிறுவர்கள் மட்டக்களப்பு பகுதிக்கு வேலை தேடிக் கொண்டு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுடன் சிறுவர்களின் பெற்றோர்கள் மட்டக்களப்பு பகுதிக்கு சென்று அவர்களை அழைத்து வந்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்