-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சர்வ தேசமே பதில் சொல், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே,கையளித்தவர்கள் எங்கே உள்ளிட்ட சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்