தம்புள்ளை – மஹியங்கனை வீதியிலிருந்து புத்தல பிரதேசத்தை நோக்கி பயணித்த பால் பவுசர் ஒன்று நேற்று புதன் கிழமை வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் வந்த காட்டு யானை மீது மோதாமல் இருக்க பால் பவுசரின் சாரதி முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.