-பதுளை நிருபர்-
அராவ மஹியங்கனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் காட்டு யானை தாக்குதலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
திக்கொட சேரானகம பகுதியை சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.