-தம்பிலுவில் நிருபர்-
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவில் சங்கமன்கந்த P/22 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட லைட் ஹவுஸ் வீதியில் காட்டு யானை தாக்கி இத்தாலி பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரனையை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.