-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிம்பிலியாகஹ எல்ல , பிட்டபொல பகுதியில் வீதியின் ஓரத்தில் காட்டுப்பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் போவத்தை இதழ்கஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலத்தை நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக தியத்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேபால ரத்னாயக தலைமையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.