-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம-
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காட்டு யானை தாக்குதலில் சொத்து சேதம் ஏற்பட்டமைக்கான நஷ்டயீட்டு கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.
காட்டு யானைகளினால் கடந்த 2023 பெப்ரவரி – மார்ச் மாதமளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டயீட்டினை விரைவாக வழங்குவதற்கு பிரதேச செயலாளர் எடுத்த முயற்சியின் பலனாக சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காட்டு யானைகளால் சேதம் ஏற்பட்ட 30 நபர்களுக்கு இவ் நஸ்டயீட்டு காசோலை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யு.எம். அஸ்லம், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு பொறுப்பான தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாறுடீன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கிவைத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்