-மூதூர் நிருபர்-
திருகோணமலை கடற்கரை சட்ட விரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கு, இன்று புதன்கிழமை காலை 10:10 மணிக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, கஸ்ஸப தேரர் தவிர ஏனைய 13 நபர்களும் நீதிமன்றுக்கு சமூகம் அளித்த நிலையில், வழக்குக்கு சமுகமளிக்காத கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.










