கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உயர் தரத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்தை கற்பதாக கூறும் மாணவர் ஒருவரினால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“என் பெயர் அநாமதேய EEE , நான் தற்போது உயர் தரத்தில் படித்து வருகிறேன், உங்கள் இணையத்தளத்தை அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிக்கவும், ஆனால் உங்கள் இணையத்தளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன அதை சரிசெய்யவும், ஒரு இலங்கை பிரஜையாக இதை சுட்டிக்காட்ட வேண்டியது என்னுடைய கடமை, நன்றி” என்று கல்வி அமைச்சின் இணையதளத்தில் சைபர் தாக்குதல் நடாத்திய மாணவனால் ஒரு செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
